ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராசியில்லாத நடிகை என, முத்திரை குத்தப்பட்ட ரெஜினாவின் காட்டில், இப்போது அடைமழை பெய்கிறது. மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவருக்காக வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதையடுத்து, ரெஜினா, தெலுங்கில் நடித்த சில படங்களை, தமிழில் 'டப்' செய்யும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. மாநகரம் படத்தின் வெற்றிகரமான ஜோடியான, சந்தீப் கிஷன் - ரெஜினா ஆகியோர் நடித்த, ரா ரா கிருஷ்ணய்யா என்ற தெலுங்கு படத்தை, மகேந்திரா என்ற பெயரில், தமிழில் டப் செய்கின்றனர். தன் படங்கள், அடுத்தடுத்து ரிலீஸ் ஆவதால், ரெஜினாவும் உற்சாகத்தில் இருக்கிறார்.