'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அலைபாயுதே படத்தில் தமிழுக்கு வந்த மாதவன், அதையடுத்து தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் மார்க்கெட் சரிவு கண்ட நிலையில், இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடித்தார். இந்த நிலையில், தற்போது விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இதற்கு முன்பு லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்தில் பயந்தாங்கொள்ளி போலீசாக நடித்துள்ள மாதவன், இந்த விக்ரம் வேதா படத்தில் அதிலிருந்து மாறுபட்ட போலீசாக நடித்திருக்கிறார்.
ஆனால் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, விக்ரம் வேதாவில் மாதவனின் வேடம் குறித்து கூறுகையில், இந்த படத்தில் மாதவன் கெட்ட போலீசாக நடித்திருப்பதாக சொல்கிறார். சாதாரணமாக ஒரு நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் நடக்கும் பிரச்சினையில் தான் கதைகள் வருகின்றன. ஆனால் இந்த விக்ரம் வேதா இரண்டு கெட்டவர்களுக்கிடையே நடக்கும் பிரச்சினையில் உருவாகியிருக்கிறது. ஆக, இந்த படம் வழக்கத்தில் இருந்து மாறுபட்ட கதையில் உருவாகியிருக்கிறது என்கிறார் விஜயசேதுபதி.