இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பா.ரஞ்சித் இயக்குநராக அறிமுகமாகிய அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சிவகார்த்திகேயனுடன் எதிர் நீச்சல் உட்பட பல படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துபோயின.
தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களை கையில் வைத்திருக்கும் நந்திதா, செல்வராகவன் இயக்கத்தில் நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படம் இம்மாதம் திரைக்கு வர உள்ளது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின மனைவியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நந்திதா.
இதற்கிடையில், தனது கேரியர் பற்றி முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். அதாவது, தெலுங்கில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடிக்கும் கதாப்பாத்திரங்களே நந்திதாவை தேடி வருகின்றனவாம். எனவே அவற்றை தவிர்த்துவிட்டு தெலுங்குப்படங்களில் மட்டும் கிளாமராக நடிக்க தற்போது முடிவு செய்திருக்கிறார் நந்திதா.