பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்', 'வாலு' பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். இரண்டு படங்களில் விக்ரம் நடிக்க ஆரம்பித்தால் ஒரு படம் முடங்கிவிடும் என்பது கடந்த காலங்களில் கண்ட காட்சிகள்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்து வந்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இன்னும் முடிவடையவில்லை. அந்தப் படம் இப்போது முடிய வாய்ப்பில்லை என்பதால், 'ஸ்கெட்ச்' படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் விக்ரம்.
தமன்னா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் வசனக்காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னும் இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே பாக்கி. விக்ரம், தமன்னா பங்குபெறும் அந்த இரண்டு பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பையும் ஜூலை 15ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்த உள்ளனார். திட்டமிட்டபிடி அனைத்து வேலைகளும் முடிவடைந்தால், ஏற்கெனவே முடிவு செய்தபடி ஆயுத பூஜை விடுமுறையில் 'ஸ்கெட்ச்'சை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
சிவகார்த்திகேயனின் வேலைக்காரனுக்கு போட்டியாக ஸ்கெட்ச் களமிறங்குகிறது. ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஸ்பைடர் போட்டியில் உள்ளது.