ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் விக்ரம் வேதா. இப்படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பி.எஸ்.விநோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்தை சஷிகாந்த் தயாரித்துள்ளார்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது. காவல்துறை அதிகாரியாக மாதவனும், தாதாவாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மாதவன் சிபாரிசில் ஷாருக்கானும் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து இப்படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டனர்.
புஷ்கர் - காயத்ரி இணைந்து இயக்கியுள்ள இந்தப் படத்தை தணிக்கைக்கு அனுப்பினார்கள். விக்ரம் வேதா படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர், தற்போது மறுதணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்தள்ளார்.
தாதா, என்கவுட்டர் போலீஸ் அதிகாரி இடையிலான மோதலை வைத்து எடுக்கப்பட்டுள்ள விக்ரம் வேதா படத்தில் வன்முறை அளவுக்கதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல். ரிவைசிங் கமிட்டிக்கு இங்குள்ள சினிமா ஆட்கள் தலைவர்களாக இருப்பதால் நிச்சயமாக யு அல்லது யுஏ சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தயாரிப்பாளர்.