இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தீப் கிஷனும், ரெஜினாவும் தெலுங்கில் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது அவர்கள் மீண்டும் தமிழில் அறிமுகமாகி நடித்து வருகிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாகிவிட்டார்கள். இதனால் சந்தீப், ரெஜினா நடித்த தெலுங்கு படங்களை தமிழில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். இந்த வரிசையில் முதலில் வருகிறது ரா ரா கிருஷ்ணய்யா.
3 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற இந்தப் படத்தை பி.மகேஷ் இயக்கினார். வம்சி கிருஷ்ணா தயாரித்தார். சந்தீப், ரெஜினாவுடன், ஜெகபதிபாபு, கல்யாணி, தணிகலபரணி, காவேரி, ரவிபாபு உள்பட பலர் நடித்திருந்தனர். சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார், அச்சு ராஜாமணி இசை அமைத்திருந்தார்.
தீயவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த ஒருவன் சிறுவனாக இருந்த போதே நல்லவனாக வாழ்கிறான். தங்கள் வழிக்கு அவனைக் கொண்டு வர அவர்கள் முயற்சிக்க, அவர்களை தன் வழிக்கு கொண்டு வர அவன் முயற்சிக்கிறான் இதில் யார் ஜெயித்தார்கள் என்பது தான் கதை, படம். படத்திற்கு மகேந்திரா என்று பெயர் சூட்டியுள்ளனர். விரைவில் வெளியாக உள்ளது.