ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திறமையும் அழகும் இருந்தாலும் நல்ல நேரம் அமைந்தால் தான் வெற்றி கிடைக்கும் என்பார்கள். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அஸ்வினுக்கு பொருந்தும். கவுதம் மேனனின் கண்டுபிடிப்பான அஸ்வின் நடுநிசி நாய்கள் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு மங்காத்தா, 7ம் அறிவு படங்களில் நடித்தார். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்தார்.
இதில் நடுநிசி நாய்கள் தவிர மற்றவை வெற்றிப் படங்கள்தான். ஆனால் அதன்பிறகு அஸ்வின் சோலோ ஹீரோவாக நடித்த மேகா, ஜீரோ, படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது அவர் நடித்துள்ள திரி படம் தனக்கு கை கொடுக்கும் என்ற நம்புகிறார்.
சீ சோர் கோல்ட் புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை அசோக் அமிர்தராஜ் இயக்கி உள்ளார். அஸ்வின் ஜோடியாக ஸ்வாதி நடித்துள்ளார். ஏற்கெனவே இருவரும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திலும் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர ஜெயபிரகாஷ், ஏ.எல்.அழகப்பன், டேனியல், சென்ட்ராயன், அனுபமா குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், அஜீஸ் அசோக் இசை அமைத்துள்ளார். படத்தில் நடித்திருப்பது பற்றி அஸ்வின் கூறியதாவது:
திரி ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம் . ஆனாலும் இதில் குடும்ப பந்தங்கள் பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது. ஆக்ஷ்ன், காமெடி, காதல் மற்றும் சென்ட்டிமென்ட் ஆகியவற்றை சரியான அளவில் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர். இப்படத்தில் தந்தை - மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும், அழகாகவும் கையாளப்பட்டுள்ளது. ஜெயபிரகாஷ், எனது அப்பாவாக நடித்துள்ளார். அழகப்பன், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரி சில சமுதாய அவலங்களை பற்றி பேசும் ஜனரஞ்சகமான குடும்ப படம். எனது நடிப்பு வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படமாகும் என்கிறார் அஸ்வின்.