ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய்குமார் நடிக்கும் 2.ஓ படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
ரஜினியின் முந்தைய படமான கபாலி படத்தை விமானத்தில் விளம்பரம் செய்தனர். இப்போது 2.ஓ படம் பிரமாண்ட பட்ஜெட்டில் சுமார் 350 கோடியில் தயாராகும் படம் என்பதால் படத்தை உலகம் முழுக்க அதிகளவில் ரிலீஸ் செய்ய லைக்கா திட்டமிட்டிருக்கிறது.
அதன்படி, திரையிடப்படும் நாடுகளில் 100 அடி உயர பலூன்களை பறக்கவிட்டு விளம்பரம் செய்ய திட்டமிட்டிருந்தார்கள். இதற்காக 100 அடி உயர வெப்பக் காற்று பலூனுக்கு 8 மாதங்கள் முன்பாக ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி 2.O உலக புரொமோஷன் ஹாலிவுட்டில் இருந்து ஆரம்பமானது. ரஜினி, அக்ஷ்ய் குமார் மோதும் 2.O படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இந்த பலூன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் பறந்த 2.O பலூன் அதனைத்தொடர்ந்து, லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, தெற்காசிய நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மேல் பறக்கவுள்ளது.
இந்தியாவிலும் பல்வேறு நகரங்களுக்கு இந்த வெப்பக்காற்று பலூனைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.