டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கற்றது தமிழ், தங்கமீன்கள் போன்ற படங்களை இயக்கிய ராம், தரமணி என்ற படத்தை இயக்கியுள்ளார். வசந்த் ரவி என்ற புதுமுகத்துடன் ஆன்ட்ரியா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். இப்படம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில், சதீஷ்குமார் தயாரித்துள்ள மற்றொரு படமான ஆண்டாவ காணோம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் ராம். அப்போது பேசிய ராம், இயக்குநர் சதீஷை பற்றி ஏகத்துக்கும் புகழ்ந்தார். அதேசமயம், ஜே.சதீஷ்குமார் தயாரிக்கும் ஒவ்வொரு படத்தையும் காலத்தோடு ரிலீஸ் செய்யாமல் வருடக்கணக்கில் கிடப்பில் போட்டு வைப்பதை சுட்டிக்காட்டும் வகையில் வஞ்சப்புகழ்ச்சி செய்தார். தன்னுடைய பட விழாவில் இயக்குநர் ராம் இப்படி பேசியதைக் கண்டு சற்றே அதிர்ச்சியடைந்த ஜே.சதீஷ்குமார், தரமணி படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்தார்.