வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கவுதம் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரங்கூன். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவரின் நடிப்பில் இவன் தந்திரன் படம் வெளியாக உள்ளது. இயக்குநர் கண்ணன் இயக்கி, தயாரித்திருக்கிறார். இப்படம் தொடர்பாக திருச்சி சென்றிருந்த கவுதம் கார்த்தி, கண்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய கவுதம் கார்த்திக், எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கும், அரசியலுக்கும் ரொம்ப தூரம், ஆகையால் அதைப்பற்றி நான் எதுவும் கூற முடியாது என்றார்.
தொடர்ந்து ரஜினியின் அரசியல் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்க, அதற்கு பதிலளித்த கவுதம், ரஜினி அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர் எப்போதும் ஒரு நடிகராக, சூப்பர் ஸ்டாராகவே இருக்க விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து என்றார்.
கவுதம் கார்த்திக் விளக்கம் : இதனிடையே, ரஜினியின் அரசியல் குறித்து தான் சொன்ன விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதை அரசியலாக்க வேண்டாம், எனக்கு அரசியலை பற்றி எதுவும் தெரியாது என்று விளக்கமளித்துள்ளார் கவுதம் கார்த்திக்.