ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பரதன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்து தமிழில் பொங்கலுக்கு வெளிவந்த படம் 'பைரவா'. இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இப்படத்தை தெலுங்கில் 'ஏஜன்ட் பைரவா' என்ற பெயரில் டப்பிங் செய்து முடித்துள்ளார்கள். படத்தை ஜுலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இப்படத்தின் டிரைலர் மற்றும் டீசரை வெளியிட்டுள்ளார்கள்.
ஒரு தெலுங்குப் படத்துக்கு உரிய ஆக்ஷன் இந்தப் படத்தில் இருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாயகி கீர்த்தி சுரேஷ் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். வில்லன் ஜெகபதி பாவு தெலுங்கு நடிகர்தான். அதனால், தெலுங்கு ரசிகர்களுக்கு இந்த 'ஏஜன்ட் பைரவா' படம் ஒரு நேரடித் தெலுங்குப் படம் பார்த்த திருப்தியைக் கொடுக்கும் என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.