ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் - அறம் செய்து பழகு. இந்தப் படத்தில் மாநகரம் சந்தீப், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். அறிமுக நாயகியான மெஹரீன் பிர்சடா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தமிழ்ப்படமாக தொடங்கப்பட்ட அறம் செய்து பழகு படம் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு டப்பிங்குக்கு c/o சூர்யா என பெயர் வைத்துள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை நேற்று (ஜூன் 12) நடிகர் கார்த்தி வெளியிட்டார். அதே போல் இப்படத்திற்கான தெலுங்கு தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
அறம் செய்து பழகு படம், தெலுங்கிலும் ரிலீஸாக உள்ளது. சந்தீப் கிஷன் படத்தை வாங்கி, அதை தெலுங்கில் வெளியிடுவதாக கூறப்படுகிறது.