Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தர்மசங்கடத்தில் நெளிந்த காமெடியன்கள் சூரி-சதீஷ்

11 ஜூன், 2017 - 13:52 IST
எழுத்தின் அளவு:
soori-sathish-uprest-in-audio-launch

ஜூன் 9 ம் தேதி சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் பசங்க பாண்டிராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள செம படத்தின் ஆடியோ விழா நடைபெற்றது. ஜி.வி.பிரகாஷ்-அர்த்தனா நடித்துள்ள இந்த படத்தில் காமெடியனாக நடித்துள்ள யோகிபாபு கலந்து கொள்ளவில்லை. ஆனால், இந்த படத்தில் நடிக்காத காமெடியன்கள் சூரி, சதீஷ் ஆகிய இருவரும் மேடையில் தோன்றி ஆரம்பத்தில் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்தும் வழங்கினார்கள்.

இந்நிலையில், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா மேடையில் ஏறியபோது, செம படத்தை வாழ்த்தி பேசினார். பின்னர், சூரி, சதீஷைப் பார்த்து, நான் தயாரித்த பல படங்களில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள். ஆனால் ஆடியோ விழாக்களில் கலந்து கொள்ள வில்லை. இந்த படத்தில் நீங்கள் நடிக்கவேயில்லை. ஆனால் கலந்து கொண்டிருக்கிறீர்கள் சந்தோசம். இனிமேல் என் படங்களில் நடிக்கும்போது கண்டிப்பாக பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று சிரித்தபடியே கேட்டுக் கொண்டார்.


அதைக்கேட்டு, பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த அவர்கள் இருவரும் தர்மசங்கடத்தில் நெளிந்தவாறு எழுந்து நின்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள், பின்னர் அமர்ந்து கொண்டனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in