பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் விவேகம் படத்தின் டீசர் கடந்த மாதம் 11ம் தேதி யுடியூபில் வெளியிடப்பட்டது. அடுத்தடுத்து பல சாதனைகளைப் படைத்த விவேகம் டீசர் ரஜினிகாந்த் நடித்த கபாலி டீசரின் சாதனைகளையும் முறியடித்தது.
தமிழ்த் திரைப்பட டீசர்களில் இதுவரையில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசராக கபாலி டீசர் இருக்கிறது. இந்த டீசரை இதுவரையில் 3 கோடியே 39 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கடுத்து 1 கோடியே 53 லட்சம் பார்வைகளைப் பெற்று விஜய் நடித்த பைரவா டீசர் பெற்றுள்ளது. விவேகம் டீசர் தற்போது வரை 1 கோடியே 50 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. பைரவா டீசரை மிஞ்ச சுமார் 2 லட்சம் பார்வைகள் மட்டுமே தேவைப்படுகிறது.
அதே சமயம், கபாலி டீசரின் லைக்குகளை விவேகம் டீசர் முறியடிக்க இன்னும் 58 ஆயிரம் லைக்குகள் தேவைப்படுகிறது. விவேகம் டீசர் பார்வை எண்ணிக்கையில் பைரவா டீசரையும், லைக்குகள் எண்ணிக்கையில் கபாலி டீசரையும் மிஞ்சினாலும், பார்வை எண்ணிக்கையில் கபாலி டீசரை மிஞ்சுவது கடினம். கபாலி டீசரின் பார்வை சாதனையை முறியடிக்க இன்னும் 2 கோடி பார்வை தேவைப்படுகிறது. அதற்குள் விவேகம் படத்தின் டிரைலர் வெளிவந்துவிட்டால் அஜித் ரசிகர்களின் பார்வை டிரைலர் பக்கம் போய்விடும்.
கபாலி டீசர் சாதனையை முறியடிப்பது என்பது அஜித், விஜய் ரசிகர்களால் முடியுமா என்பதும் சந்தேகம்தான்.