பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு படத்தை தொடங்குவது, அதை முடிப்பதற்கு முன்பே இன்னொரு படத்தை தொடங்குவது, அதனால் முதலில் தொடங்கிய படத்தை கிடப்பில் போடுவது... இப்படி செய்வதை தன்னுடைய பாணியாகவே வைத்திருக்கிறார் கௌதம் மேனன்.
'இருமுகன்' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் விக்ரம். அப்படத்தின் படப்பிடிப்பு பாதிகூட முடியாத நிலையில், கௌதம் மேனன் அடுத்தப்பட வேலையில் பிசியானார். இதனால் 'வாலு' பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' படத்தில் நடிக்கப்போய்விட்டார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. வரும் 15ஆம் தேதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஆரம்பிக்க உள்ளனர். இந்நிலையில், கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு தான் துருவ நட்சத்திரம் வெளியாகும் என்கிறது விக்ரம் தரப்பு.