இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடித்துள்ள படம் சாவி. இவர் பிரபுசாலமனிடம் பல படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர். சுனு லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார். ராஜலிங்கம், உதயபானு மகேஸ்வரன், ஸ்டில் குமார், நந்தலாலா உள்பட பலர் நடித்துள்ளனர். சேவற்கொடி படத்தை இயக்கிய இரா.சுப்பிரமணியன் இயக்கியுள்ளார். சதீஷ் தாயன்பன் இசை அமைத்துள்ளார், சேகர் ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 16ந் தேதி படம் வெளிவருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளரும், ஹீரோவுமான பிரகாஷ் சந்திரா கூறியதாவது:
திண்டுக்கல் பூட்டு பிரபலமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மதுரையில் சாவி தயாரிப்பு பிரபலம் என்பது பலருக்கும் தெரியாது. இப்போதும் அது ஒரு தனி தொழிலாக நடந்து வருகிறது. சாவி தயாரிக்கும் ஒருவனுக்கு வரும் காதலும், அந்த காதலுடன் வரும் பிரச்சினைகளும்தான் கதை. இதுவரை சாவி தொழில் பின்னணியில் திரைப்படங்கள் எதுவும் உருவானதில்லை. இந்த படத்தின் வழியாக அந்த தொழிலையும், அதில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறோம்.
சினிமா மேல் இருந்த காதலால் தான் பிரபு சாலமன் சாரிடம் உதவியாளராக சேர்ந்தேன். இப்போது சாவி படத்தில் நடித்திருப்பதோடு, தயாரிக்கவும் செய்திருக்கிறேன். பல்லேறு சிரமங்களுக்கு இடையில் இந்த படத்தை முடித்திருக்கிறேன். சத்யராஜ் நடித்த சாவி படத்தின் தலைப்பு உரிமத்தை அதன் தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்று பயன்படுத்தியிருக்கிறேன். இந்த சாவி என் சினிமா கதவை திறக்கும் என்று நம்புகிறேன். என்கிறார் பிரகாஷ் சந்திரா.