தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் குறித்து தினம் தினம் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மும்பையில் பிரபல தாதாவாக விளங்கிய ஹாஜி மஸ்தானின் கதைதான் காலா என்று முதல் தகவல் வெளியானது. அதை பா.ரஞ்சித் மறுத்தார்.
லேட்டஸ்ட் தகவலாக காலா படத்தில் ரஜினியின் சிறுவயது கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து காலா தயாரிப்பு தரப்பிலிருந்து எவ்வித அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை. அதே சமயம் இந்த தகவலை அவர்கள் மறுக்கவில்லை. சமீபத்தில் தனுஷ் இயக்கி, தயாரித்து, நடித்த ப. பாண்டியில் ராஜ்கிரணின் சிறு வயது கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார். அந்த வேடத்துக்கு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இப்போது ரஜினியின் காலாவில் ரஜினியின் சிறுவயது கேரக்டரிலும் நடிக்க தனுஷ் விருப்பம் தெரிவித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கேரக்டரில் மற்றொரு பாலிவுட் நடிகையான அஞ்சலி பாட்டீல் நடிக்கிறார். ரஜினியின் இளவயது வேடத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற இந்த தகவல் உண்மை எனில், காலா படத்தில் இன்னொரு கதாநாயகி நடிக்க வாய்ப்புள்ளது.
அதாவது தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையாக அவர் இருப்பார்.