ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
செல்போனால் வரும் பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு பல படங்கள் உருவாகி இருக்கின்றன. இப்போது அந்த வரிசையில் அலைபேசி என்ற படமும் தயாராகிக் கொண்டிருக்கிறது. விஜயலட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ராமச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை முரளி பாரதி இயக்குகிறார். இதில் கல்லூரி அகில், அனுகிருஷ்ணா ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர சிங்கம்புலி, அனுமோகன், சாந்தி, கானா பாலா, உள்பட பலர் நடிக்கிறார்கள். மோகன் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.பி.செல்வதாஸ் இசை அமைக்கிறார்.
"அன்று தொலைபேசி காலம். இன்று அலைபேசி காலம். அலைபேசியால் ஒரு காதல் உருவாகிறது. அந்த காதல் எப்படி எல்லாம் பந்தாடப்படுகிறது. அந்த காதல் ஒன்று கூடியதா? ஒருதலை காதலானதா? இளைய சமுதாயத்தை அலைபேசிகள் படுத்தும் பாடு, அதனால் ஏற்படும் சுமைகள் மற்றும் சுகங்களை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது " என்கிறார் இயக்குனர் முரளிபாரதி.