'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் காலா. ரஜினியின் கபாலி படத்தை ரஞ்சித் சிறப்பாக இயக்கியிருந்ததால் அடுத்தும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கித்தர வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளராக கேட்டுக் கொண்டார் தனுஷ். அதனால் சூர்யாவை வைத்து படம் இயக்கயிருந்த பா.ரஞ்சித், மீண்டும் ரஜினி படத்திற்கான கதை எழுதும் வேலைகளில் இறங்கியவர், தற்போது மும்பை தாராவியில் காலா படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
மேலும், இந்த படம் தொடங்கியதில் இருந்தே தனுசும் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியானபோதும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படாத செய்தியாக உலவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ப.பாண்டி படத்தில் இளமைக்கால ராஜ்கிரணாக நடித்தது போன்று, காலா படத்திலும் இளமைக்கால ரஜினி வேடத்தில் தனுஷ் நடிக்கயிருப்பதாக தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், தனுஷ் தான் கரிகாலன் என்கிறார்கள்.