பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அஜித் அடுத்து நேரடி இந்திப் படத்தில் நடித்தால் அங்கும் அதிகமான வரவேற்பைப் பெற்றால் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதற்கு முன் இந்தியில் 'அசோகா' படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றிலும், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் கேமியோ தோற்றத்திலும் அஜித் நடித்திருந்தார்.
2015ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற 'வேதாளம்' படம் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டது. அந்தப் படத்தை யு டியூபிலும் முழுவதுமாக அதிகாரப்பூர்வமாக பதிவேற்றியிருந்தார்கள். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் யு டியூபில் பதிவேற்றப்பட்ட அந்தப் படம் இதுவரையிலும் 12 மில்லியன் பார்வைகளைக் கடந்திருக்கிறது.
தமிழில் எடுக்கப்பட்டு இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட 'வேதளாம்' படம் யு டியூபில் 1 கோடியே 20 லட்சம் பார்வைகளைக் கடந்திருப்பது ஆச்சரியமான ஒன்று. இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட வேறு எந்த தமிழ்ப் படமும் இந்த அளவிற்கு பார்வைகளைப் பெற்றது இல்லை.
அஜித் ரசிகர்களே அந்த வீடியோவைத் திரும்பத் திரும்பப் பார்த்தார்களா அல்லது இந்தி ரசிகர்கள் பார்த்தார்களா என்பதுதான் புரியாத புதிர். எப்படியோ அஜித் ரசிகர்களுக்கு இதுவும் ஒரு கொண்டாட்டமான சாதனைதான்.