ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். இது சினிமாவுக்கும் பொருந்தும். ஏழாம் அறிவு படத்தின் போது முருகதாஸ் - உதயநிதி இடையே மனகசப்பு ஏற்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின. படம் எதிர்பார்த்த லாபம் தராததால், ஏ.ஆர்.முருகதாஸ் மீது செம கடுப்பில் இருந்தாராம் உதயநிதி. ஆனால், கால ஓட்டத்தில் கோபம் மறைந்து, தான் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை ஏ.ஆர்.முருகதாஸ் முலம் வெளியிட வைத்திருக்கிறார் உதயநிதி.
'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' ஆகிய படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் 'இப்படை வெல்லும்'. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் வெளியிட்டார்.
உதயநிதியின் சமீபத்திய படமான சரவணன் இருக்க பயமேன் மிகப்பெரிய தோல்வியடைந்ததை அடுத்து 'இப்படை வெல்லும்' படத்தையே தற்போது நம்பி இருக்கிறார். இப்படை வெல்லும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.