தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில், தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard என்ற பிரபல ப்ரெஞ்ச் நாவலை தழுவி உருவாகி வரும் இப்படத்தில் பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் கதை தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்தியாவிலிருக்கும் அஜா, ஏழ்மையான மாயாஜால வித்தைக்காரன். அவனது அம்மா, அவனை ஒரு மர்மமான நோக்கத்துக்காக பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஈஃபில் டவருக்கு அனுப்புகிறார். ஒரு டாக்ஸி ஓட்டுநருடன் ஏற்படும் தகராறால் அஜா, பாரிஸின் மிகப்பெரிய மரச்சாமான் கடையில் உள்ள ஒரு அலமாரிக்குள் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொள்ள, அந்த அலமாரி விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு ஐரோப்பாவை சுற்றி வருகிறது. கொள்ளைக்காரர்கள், எல்லையோர காவலர்கள் என தனது பயணத்தில் பலவிதமான மனிதர்களை சந்திக்கும் அஜா, ஆபத்தை தாண்டியபடியே உலகை சுற்றி வருகிறான். அஜாவின் அறிவாற்றலும், கைவசம் இருக்கும் தந்திரங்களும் மீண்டும் அவனை பாரிஸ் கொண்டு செல்லுமா? என்பதே தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதையாம்.