ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வெற்றியை ருசித்த விஷ்ணு விஷால் அடுத்த நடித்த மாவீரன் கிட்டு படத்தில் தோல்வியை சந்தித்தார். தற்போது காமெடி நடிகரும், புதுமுக இயக்குநருமான முருகானந்தம் என்பவரது இயக்கத்தில் கதாநாயகன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
விஷ்ணு விஷால் ஜோடியாக கேத்தரீன் தெரசா நடிக்கிறார். காமெடியனாக, சூரி நடித்துள்ளார். விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். பெயரிடப்படாமலே இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. பின்னர் இப்படத்துக்கு கதாநாயகன் என பெயரிடப்பட்டது.
தற்போது படத்தின் படப்பிடிப்பும் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விஷ்ணு விஷாலே தயாரித்து வரும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
கதாநாயகன் படத்தை அடுத்து தொடர்ந்து முண்டாசுப்பட்டி ராம் இயக்கத்தில் மின்மினி மற்றும் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.