மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
இளையராஜாவின் மகன்களில் கார்த்திக் ராஜா ஆரம்பத்தில் பல படங்களுக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். ஆனால் ஒருகட்டத்தில் சரியான படவாய்ப்புகள் இல்லாமல் தந்தை இளையராஜா இசையமைக்கும் படங்களில் பணியாற்றி வந்தார். ஆனால் அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அவரது தம்பி யுவன் ஷங்கர் ராஜா 100 படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.
இந்நிலையில், தற்போது பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்துள்ள படைவீரன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் கார்த்திக்ராஜா. இந்த படத்தில் தனது தம்பி யுவனையும் ஒரு பாடல் பாட வைத்துள்ளார். இந்த படைவீரன் படத்தின் பாடல் ரைட்ஸை யுவன் ஷங்கர் ராஜாவே தனது யு1 ஆடியோ நிறுவனம் மூலம் வாங்கி வெளியிட்டுள்ளார்.
மேலும், அதிகமான படங்களுக்கு இசையமைக்காதது குறித்து கார்த்திக் ராஜா கூறுகையில், எனக்கு நிறைய படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்பதை விட நல்ல கதையுள்ள படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. கதை பிடிக்காத பல படங்களுக்கு இசையமைக்க நான் மறுத்திருக்கிறேன். இந்த படைவீரன் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அந்த கதைக்கு தேவையான பாடல் மற்றும் பின்னணி இசையை சிறப்பாக கொடுத்திருக்கிறேன். அதனால் இந்த படைவீரன் என்னை பேச வைக்கும் படமாக இருக்கும் என்கிறார் கார்த்திக் ராஜா.