இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் 'சாஹோ' படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெறுவதில் கடும் போட்டி நிலவி வருகிறது. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் தமன்னா, அனுஷ்கா ஜோடியாக நடித்துவிட்டதால் அவர்கள் இருவரும் பிரபாஸுடன் அடுத்த படத்திலும் நடிக்க வாய்ப்பில்லை.
பிரபாஸுக்கு தற்போது இந்திய அளவில் மிகப் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அவருடன் நடித்தால் எளிதில் புகழ் பெற்றுவிடலாம் என பல நடிகைகள் போட்டி போடுகிறார்களாம். ஆனால், இதுவரை தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு நடிகையையும் ஒப்பந்தம் செய்யவில்லை என்று மறுத்து வருகிறார்கள்.
பிரபாஸை ஹிந்திப் படங்களிலும் நடிக்க வைக்க பல பாலிவுட் இயக்குனர்கள் தயாராகி வருகிறார்களாம். 'பாகுபலி 2' படத்தை ஹிந்தியில் வெளியிட்ட கரண் ஜோஹர் அவருடைய தயாரிப்பில் நடிக்கப் பேச்சு வார்த்கைளை ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 'சென்னை எக்ஸ்பிரஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரோகித் ஷெட்டியும், பிரபாஸுடன் பணிபுரிய ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
'பாகுபலி 2' படத்தால் இயக்குனர் ராஜமௌலிக்குப் பிறகு அதிக புகழைப் பெற்றிருப்பவர் பிரபாஸ்தான்.