ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பேஷன் ஸ்டூடியோ சார்பில் அருண் வைத்தியநாதன், தன் நண்பர்களுடன் இணைந்த தயாரிக்கும் படம் நிபுணன். அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி, சுஹாசினி நடித்துள்ளனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார், நவீன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாட்டில் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது நிபுணன் படத்தை அர்ஜுனின் 150 படமாக அறிவித்துள்ளார்கள். இதுபற்றி இயக்குனரும் தயாரிப்பாளருமான அருண் வைத்தியநாதன் கூறியதாவது:
அர்ஜுன் சாரின் 150 படமாக நிபுணன் படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இதனை டீஸர் மூலமாக கொண்டாட இருக்கிறோம். பல ஆண்டுகள் நிறைந்த அவரது உன்னத உழைப்பையும், சீரிய முயற்சியையும் நாங்கள் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம். கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் நிபுணன். நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் "நிபுணன்". என்கிறார் இயக்குனர் அருண் வைத்தியநாதன்.