சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
போக்கிரி ராஜா, திருநாள், கவலை வேண்டாம் என தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஜீவா அடுத்து ஒரு வெற்றி கட்டாயம் என்ற நிலையில் இருக்கிறார். அடுத்து வெளிவர இருக்கும் காமெடி படமான சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்து கீ என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நாடோடிகள், ஈட்டி, மிருதன் படங்களை தயாரித்த குளோபல் இன்போடெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இது இந்த நிறுவனத்தின் 10வது படம். இதில் ஜீவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இரண்டாவது ஹீரோயினாக அனைகா சோதி நடிக்கிறார். இவர்கள் தவிர ஆர்.ஜே.பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள். செல்வராகவன் உதவியாளர் காலீஸ் இயக்குகிறார்.
கடந்த ஏப்ரல் 21ந் தேதி முதல் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. மே மாதம் 20ந் தேதி படப்பிடிப்புகள் நிறைவுபெறுகிறது.