ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கணிதன் படத்திற்கு பிறகு செம போதை ஆகாத, இமைக்கா நொடிகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், ஒத்தைக்கு ஒத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இதில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் சூரியுடன் இணைந்து நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா உள்பட பல நடி கைகள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. மே மாதம் 19-ந்தேதியில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், பாகுபலி-2 படம் வெளியாகியிருப்பதால் ஏற்கனவே கோடை விடு முறையில் வெளியாகயிருந்த பல படங்கள் தியேட்டர் பிரச்சினை காரணமாக பின் வாங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் தற்போது அதர்வா படத்தின் ரிலீசை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்து விட்டனர்.