பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தேவி படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் படம் - வனமகன். ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சாயிஷா சைகல் கதாநாயகியாக நடித்துள்ளார். திரு ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
வனமகன் என்ற தலைப்புக்கு ஏற்ப இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள அடர்ந்த காடுகளிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. தாய்லாந்து மற்றும் சென்னையில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. பேராண்மை படத்தில் பழங்குடி இனத்தவராக நடித்த ஜெயம் ரவி இந்தப்படத்தில் டார்ஜானைப்போல் காட்டிலேயே பிறந்து வளர்ந்தவராக நடிக்கிறார்.
வனமகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படத்தை மே 12-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர். தற்போது ஒரு வாரம் தள்ளி மே 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். வனமகன் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டிருப்பது ஏன்?
இன்னமும் எடிட்டிங் பணிகள் நிறைவடையவில்லை. பிற வேலைகளை முடித்து சென்சாருக்கு அனுப்ப அவகாசம் இல்லாததினால்தான் இந்த தள்ளி வைப்பு என்று சொல்லப்படுகிறது.