டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அஜித் நடித்த படங்களில் முக்கியமானது அமர்க்களம். இது அஜித்துக்கு 25வது படம். இதில் நடித்தபோதுதான் ஷாலினியை காதலித்து திருமணம் செய்தார் அஜித். சரண் இயக்கி இருந்தார். அஜித், ஷாலினியுடன் ரகுவரன், ராதிகா, நாசர், பூவிலங்கு மோகன், வினு சக்ரவர்த்தி, சார்லி உள்பட பலர் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசை அமைத்திருந்தார்.
1999ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது பெரும் வெற்றி பெற்றது. பிலிம்மில் உருவான இந்தப் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி ஒலி வடிவத்தை மேம்படுத்தி 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெளியிடுகிறார்கள்.
ஒரு காலத்தில் ரசிகர்களால் பெரும் வரவேற்பு பெற்ற படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறு வெளியீடு செய்வது தற்போது புதிய டிரண்ட். அந்த வரிசையில் அமர்க்களம் நாளைமறுநாள்(ஏப்., 28) வெளியிடப்படுகிறது. கே.எம்.பிலிம்ஸ் நிறுவனம் இதனை வெளியிடுகிறது. வருகிற மே 1ந் தேதி அஜித் பிறந்த நாள், அதையொட்டி படம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.