ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
நான்கு வருடங்களுக்கு முன் வெளியான 'நேரம்' படத்தை தொடர்ந்து மலையாள நடிகர் நிவின்பாலி மீண்டும் தமிழில் நடித்துவரும் படம் தான் 'ரிச்சி'. படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கினின் சீடரான கௌதம் ராமச்சந்திரன்.. இந்தப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் 'கள்ளபடம்' லட்சுமி ப்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இன்னொரு கதாநாயகனாக 'சதுரங்க வேட்டை' புகழ் நட்டி நடிக்கிறார் இந்தப்படத்தில் மிக முக்கியமான பாதிரியார் கேரக்டரில் பிரகாஷ்ராஜும், இன்னொரு முக்கியமான கேரக்டரில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியும் நடித்துள்ளார்கள்..
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நிவின்பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே இந்தப்படம் துவக்கப்பட்டு விட்டாலும் கூட, கடந்த ஜனவரி மாதம் தான் இந்தப்படத்திற்கு 'ரிச்சி' என டைட்டில் வைத்துள்ளதாக அறிவித்தார்கள்.. இப்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.. விரைவில் ரிலீஸ் என குறிப்பிட்டிருந்தாலும் மே மாத இறுதியில் இந்தப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.