பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் நிவின் பாலி இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் படம் சகாவு. இந்தப் படத்தில் அவர் தோழர் கிருஷ்ணன் என்ற கம்யூனிஸ்ட்டு இளைஞராக நடித்திருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்து துன்பத்தை வாங்கிக் கொள்ளும் தூய கம்யூனிஸ்டாக நடித்திருக்கிறார். இதில் ஐஸ்வர்யரா ராஜேஷ், அபர்ணா கோபிநாத், காயத்ரி சுரேஷ், சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற சித்தார்த்தா செல்வா இயக்கி உள்ளார்,
கடந்த 15ந் தேதி வெளியான படத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிகிறது. அதோடு கேரள கம்யூனிஸ்ட் இளைஞர்கள் தங்கள் கட்சி கொடியுடன் தியேட்டரை நோக்கி அலை அலையாக செல்கிறார்கள். சாகாவு கிருஷ்ண குமாருக்கு வாழ்த்து கோஷங்களையும், இன்குலா ஜிந்தா பாத் கோஷங்களையும் எழுப்புகிறார்கள். இதுகுறித்து நிவின் பாலி கூறியிருப்பதாவது:
அரசியல் மட்டுமில்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய சிறந்த ஒரு பொழுது போக்கு திரைப்படமாகவும் எங்களின் சகாவு உருவாகி இருக்கின்றது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை ரசிகர்களிடம் சகாவு, பெரும் வரவேற்பை பெற்று வருவது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. சகாவு வெளியான திரையரங்குகளில் எல்லாம் ஹவுஸ் புல் காட்சிகள் தான். அது மட்டுமின்றி, ரசிகர்களின் எண்ணிக்கையை சரி செய்ய, திரையரங்குகளில் கூடுதலாக காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது என்பதையும் நான் நன்கு அறிவேன்" என்கிறார் நிவின் பாலி.