சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பொதுவாக, கதாநாயகியருக்கு படங்களில் அதிக வேலை இல்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனாலும், அவர்கள் வரும் ஒரு சில காட்சிகளை கூட, ரசிகர்கள் கண் இமைக்காது ரசிப்பது உண்டு; அப்படி அனைவராலும் ரசிக்கப்படும் ஹீரோயின், தமன்னா. அவரது நடிப்பில் வெளியாகவுள்ள பாகுபலி - 2 பற்றி, மனம் திறந்து பேசுகிறார், அவர்.
பாகுபலி படத்திற்கு பின் உங்களது மாற்றங்கள்?
சொல்லப் போனால், பாகுபலி படத்துக்கு பின், என் இமேஜ், முழுவதுமாக மாறி விட்டது. எனக்கு, என் மீது, ஒரு நடிகையாக, முன்பை விட, அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. காதல் காட்சிகளிலேயே தொடர்ந்து நடித்து வந்த எனக்கு, சவாலான, வித்தியாசமான காட்சிகளிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை, இந்த படம் ஏற்படுத்தி தந்துள்ளது.
இயக்குனர் ராஜமவுலியுடன் வேலை பார்த்த அனுபவம்?
இந்த படத்தில் நடிப்பதற்காக, அவர் என்னை அழைத்தபோது, ரொம்ப சந்தோஷப்பட்டேன். அந்த படத்தில் பணியாற்றிய அனுபவம், ஒரு கனவு போல் இருந்தது. அந்த அனுபவத்தை, நம்பவே முடியவில்லை. சண்டை காட்சிகளில் நடித்த அனுபவத்தை மறக்கவே முடியாது. இன்னும் எத்தனை படங்களில் நடித்தாலும், பாகுபலியில் நடித்தது, மனதை விட்டு அகலாது. திரையுலகில், எனக்கு வித்தியாசமான பாதையை ஏற்படுத்தி கொடுத்த, ராஜமவுலிக்கு நன்றி!
பாகுபலி - 2ல் என்ன ஸ்பெஷல்?
முதல் பகுதியில் என்ன ரோலில் நடித்தேனோ, இரண்டாம் பகுதியிலும் அதே தான். முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகத்தில் அழுத்தமான கதை இருக்கும். குதிரை ஏற்ற காட்சிகள்,
சண்டை காட்சிகளில் அதிகம் நடித்துள்ளேன். ஒரு நடிகை என்பதை தாண்டி, அத்தனை சண்டை காட்சிகளையும் இந்த படத்துக்காக முறைப்படி கற்றேன்.
பாகுபலி படத்தின், செட் எப்படி இருந்தது?
வழக்கமான செட் போல இருக்காது. ஒரு பக்கம், உடை அலங்கார வேலை நடக்கும்; மற்றொரு பக்கம், நடனம், சண்டை காட்சிகளுக்கான பயிற்சி நடக்கும். ஒரே, பரபரப்பாக இருக்கும். படப்பிடிப்பில் எந்த குழப்பமும் இருக்காது. எல்லாமே திட்டமிட்டபடி நடக்கும்.
படத்தில் யாருடன் அதிக காட்சிகளில் நடித்துள்ளீர்கள்?
அனுஷ்கா, பிரபாஸ், சத்யராஜ் ஆகியோருடன் அதிக காட்சிகளில் நடித்துள்ளேன். எல்லாருமே நண்பர்கள் தான்; அதனால், எந்த பிரச்னையும் இல்லாமல் படப்பிடிப்பு நடந்தது.
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், உங்க சினிமா கனவு நிறைவேறியதாக நினைக்கிறீர்களா?
கண்டிப்பாக நிறைவேறி விட்டதாக நினைக்கிறேன். இந்த மாதிரி ஒரு படம் எடுப்பது ரொம்ப சிரமம். இப்படி ஒரு படத்தில் நடிக்க, எனக்கு வாய்ப்பு கிடைத்தது ஒரு வரம். இந்த வாய்ப்பை, நான் சரியாக பயன்படுத்திக் கொண்டதாக நினைக்கிறேன். பாகுபலி படத்தை, வேறு எந்த படத்துடனும் ஒப்பிட முடியாது; இது ஒரு பிரம்மாண்ட படைப்பு!
அடுத்தடுத்த உங்கள் படங்கள்?
சிம்புவுடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கிலும் நடிக்கிறேன். ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தருவது தான், இதற்கு காரணம்.
படத்தின் புரமோஷனுக்கு, நடிகையர் வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கே?
நான் அப்படி இல்லை. தேவி, தர்மதுரை, பாகுபலி படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வந்தேன். எதிர்காலத்திலும் தொடர்ந்து வருவேன். ஆனால், நிகழ்ச்சிகளுக்கு வராதவர்கள் பற்றி, எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.