ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
சாட்டை' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான மஹிமா நம்பியார் இப்போது சமீபத்தில் வெளியான 'குற்றம்-23' படத்தின் வெற்றிமூலம் தமிழ்சினிமாவில் சில படிகள் முன்னேறி வந்துள்ளார். இந்தநிலையில் தான் மம்முட்டி நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு மஹிமாவை தேடி வந்துள்ளது.. ஏற்கனவே திலீப் நடித்த 'கார்யஸ்தன்' என்கிற மலையாளப்படத்தில் முதன்முதலாக நடிகையாக அறிமுகமானார் மஹிமா..
அதை தொடர்ந்து தமிழ்சினிமா பக்கம் வந்துவிட்ட மஹிமா அதன்பின் மலையாள கரைப்பக்கம் செல்லவில்லை.. இப்போது குற்றம்-23'யின் வெற்றிதான் மஹிமாவுக்கு மம்முட்டி பட வாய்ப்பை வாங்கி தந்துள்ளது. இந்தப்படத்தில் மஹிமா தவிர வரலட்சுமி மற்றும் பூனம் பஜ்வா என இரு கதாநாயகிகள் ஏற்கனவே ஒப்பந்தமாகிவிட்டனர். இவர்களில் வரலட்சுமி 'கசபா' படத்திலும் பூனம் பஜ்வா 'வெனிசில் வியாபாரி' படத்திலும் மம்முட்டியுடன் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளனர்.. மஹிமாவுக்கு மம்முட்டியுடன் இதுதான் முத்தால் படம்.