தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகை ரித்து வர்மா. பாட்ஷா தெலுங்கு படத்தில் அறிமுகமான ரித்து, அதன்பிறகு மளமளவென தெலுங்கு படங்களில் நடித்தார். அவர் நடித்த பெல்லி சூப்புலு படத்தை பார்த்துவிட்டுத்தான் கவுதம் மேனன் ரித்துவை துருவநட்சத்திரம் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க வைத்துள்ளார்.
துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வரும் ரித்து வர்மா, பாகுபலி 2ம் பாகத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதுதவிர சைனா என்ற படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்து வருகிறார். பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவிலான அங்கீகாரமும், துருவ நட்சத்திரம் மூலம் தமிழ்நாட்டில் அங்கீகாரமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
"கவுதம், ஹீரோயின்கள் எப்போதுமே நல்ல இடத்துக்கு வருவார்கள். நானும் வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவும் விக்ரம் போன்ற திறமையான நடிகர்களுடன் நடிக்கும்போது இன்னும் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு" என்கிறார் ரித்து வர்மா.