பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
யாருடா மகேஷ் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். படு ஆபாசமான வசனங்கள், காட்சிகள் நிறைந்திருந்த காரணத்தினாலேயே அந்தப்படம் ஓடவில்லை. அதனால் அப்ஸெட்டாகி தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மாநகரம்' படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்.
'மாநகரம்' வெற்றிப் படத்தை தொடர்ந்து சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் மாயவன். பல வெற்றிப் படங்களை தயரித்து வழங்கிய சி.வி.குமார் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள 'மாயவன்' படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக லாவண்யா த்ரிபாதி நடித்திருக்கிறார். இப்படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
போலீஸ் அதிகாரி ஒருவருடைய வாழ்க்கைப் பின்னணியில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்களை கொண்ட கதையாம் இது. 'மாயவன்' படத்தின் பாடல்களை வருகிற 17-ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃபும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை கோபி அமர்நாத் கவனித்துள்ளார். சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல் ராஜா, அபினேஷ் இளங்கோவன் மூவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்!