ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாலு விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் ஸ்கெட்ச். இந்த படத்தில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக கங்காரு ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். கதைப்படி இப்படத்தில் தமன்னாவின் தோழியாக நடித்து வருகிறார் ஸ்ரீபிரியங்கா. தமன்னா-பிரியங்கா நடிக்கும் காட்சிகள் சமீபத்தில்தான் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் 5 நாட்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
அப்படி நடித்தபோது இருவரும் ரொம்ப அந்நியோன்யமாக பழகினார்களாம். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நிறையவே கதை பேசியிருக்கிறார்கள். விளைவு, ஸ்கெட்ச் படத்தில் தோழிகளாக நடிக்கும் தமன்னா- ஸ்ரீபிரியங்கா இருவரும் நிஜமாலுமே தோழிகளாகி விட்டார்களாம். ஒருவர் கேரவனுக்குள் இன்னொருவர் போய் கடலை போடும் அளவுக்கு நட்பு வளர்த்து வருகிறார்களாம். மேலும், இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா நடிக்க, ஸ்ரீபிரியங்காவுக்கு ஜோடியாக விஷ்வா என்ற புதுமுக நடிகர் நடிக்கிறார். அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்படுகிறது.