'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரு படம் வெளிவந்தால் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதுவதை விட இப்போதெல்லாம் ஒரே ஒரு மீம்ஸ் போட்டே அந்தப் படத்தைப் பற்றி 'புரிய' வைத்து விடுகிறார்கள். அதிலும் அதில் பல சுவாரசிய தகவல்களையும் இணைத்து விடுகிறார்கள். எங்கிருந்துதான் அதற்குப் பொருத்தமான திரைப்படக் காட்சிகள் மீம்ஸ் கிரியேட்டர்கள் தேடிப் பிடிப்பார்களோ தெரியாது.
கடந்த வெள்ளியன்று 'காற்று வெளியிடை' படம் வெளிவந்த பின் மீம்ஸ் கிரியேட்டர்கள் பல விதமான மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். எத்தனையோ விதவிதமான மீம்ஸ்கள் படம் பற்றிப் பரவினாலும் ஒரே ஒரு மீம்ஸ் மட்டும் பலரின் கவனத்தை ஈர்த்தது. அதில் மணிரத்னம் படங்களுக்கும், திருமணத்திற்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளை வித்தியாசமாகக் குறிப்பிட்டிருந்தனர். அது இதுதான்...
“அலைபாயுதே - வீட்டுக்குத் தெரியாம Register Marriage பண்ணி குடும்பம் நடத்தும் கலாச்சாரம்...
ஓ காதல் கண்மணி - First Living Together வாழ்க்கை, Marriage எல்லாம் அப்பறம் Next பார்த்துக்கலாம்ங்கிற கலாச்சாரம்...
காற்று வெளியிடை - இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் Advanced ahhh, First குழந்தை பெத்துட்டு அப்புறம் Marriage பண்ற கலாச்சாரம்...
ஆஹா இதுவல்லவோ முன்னேற்றம். Director Maniratnam படம் சுமாரா இருக்குன்னு சொன்னா நம்மளை ரசனை இல்லாதவங்கன்னு சொல்லிடுவாங்க...
நமக்கு எதுக்கு வம்பு...படம் ஆஹா Super n Awesome னு சொல்லி வச்சுருவோம்...!!!” என்ற இந்த மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மணிரத்னம் அவர் மட்டும் வித்தியாசமாக யோசித்து படங்களைக் கொடுப்பதில்லை, அவர் படம் பார்க்கும் ரசிகர்கள்யும் வித்தியாசமாக யோசிக்க வைக்கிறார்.