'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரெளத்திரம் படத்தின் மூலம் இயக்ருநராக அறிமுகமானவர் இயக்குநர் கோகுல். இவர் விஜய சேதுபதியை வைத்து ‛இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 'படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து கார்த்தி நடிப்பில் காஷ்மோரா படத்தை இயக்கினார். அவர் இயக்கத்தில் வெளியான மூன்று படங்களுமே பேசப்படும் படங்களாக அமைந்தன.
இந்தநிலையில் தற்போது தனது அடுத்த படத்தையும் விஜயசேதுபதியை வைத்து இயக்கயிருக்கிறார் கோகுல். படத்தை குறித்து விசாரித்தபோது, கோகுல் இயக்கவிருக்கும் தனது அடுத்தப்படத்தில் விஜயசேதுபதியை நாயகனாக நடிக்க வைக்க இருப்பதாகவும், படத்திற்கு ‛ஜூங்கா' என்று பெயரிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது .
‛இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ' படம் போல் ‛ ஜூங்கா' படமும் காமெடி படமாக இயக்கப்படயிருக்கிறது. ‛இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ' படத்தைவிட ‛ ஜூங்கா' படம் சிறப்பாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது. ‛ ஜூங்கா' படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ஐரோப்பாவில் எடுக்கப்பட உள்ளது . சித்தார்த் விபின் ‛ஜூங்கா' படத்திற்கு இசையமைக்கயிருக்கிறார்.
விஜயசேதுபதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். கோகுல்- விஜயசேதுபதி இணையும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் துவங்கயிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பில் சஸ்பென்ஸ் வைத்து இருக்கிறது படக்குழு. ‛ஜூங்கா ' படம் ‛இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ' படத்தின் இரண்டாம் பாகமில்லை என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது.