தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் முன்னணி காமெடியனாகி பின்னர் ஹீரோ ஆனவர் சந்தானம். தற்போது பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அப்படி தான் நடிக்கிற படங்களில் தனது டயமிங் காமெடியையும் வெளிப்படுத்திய அவர் முன்பு மாதிரி காமெடிக்கான முக்கியத்துவத்தை குறைத்து ஹீரோயிசத்தை அதிகமாக வெளிப்படுத்தி வருகிறார். இதன்காரணமாக, அவருடன் காமெடி ட்ராக்கில் நீண்ட காலமாக பயணித்த சில நடிகர் நடிகைகளுக்கு அவர் படங்களில் வாய்ப்பு இல்லாமல் போனது.
அதனால் மற்ற காமெடியன்களை தேடிச்சென்று அவர்கள் வாய்ப்புக் கேட்கத் தொடங்கினர். ஆனால் சந்தானம் டீமை சேர்ந்தவர்கள் என்று யாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த விசயம் சந்தானத்தின் கவனத்துக்கு சென்றபோது ரொம்பவே பீல் பண்ணினாராம். அதோடு, தற்போது தான் நடித்து வரும் படங்களில் அவர்களுக்கு ஏதாவது ஒரு கேரக்டர் கொடுத்து ஆதரித்து வருகிறார். இதனால் சந்தானத்தின் காமெடி டீமைச்சேர்ந்த நடிகர் நடிகைகள் மறுபடியும் பிசியாகி விட்டனர். முக்கியமாக, சிங்கமுத்து, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட சில நடிகர்களை அப்பா வேடங்களில் நடிக்க வைத்தும் பிரமோஷன் கொடுத்துள்ளார் சந்தானம்.