‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளரான அனிருத்திற்கு இந்தாண்டுக்குள் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த்தின் உறவினரான அனிருத், ‛3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற ‛கொலவெறி...' பாடல் உலகம் முழுக்க பிரபலமானது. இதனால் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு உயர்ந்தார். இடையில் நடிகைகளுடன் நெருக்கம், பீப் பாடல் சர்ச்சை போன்றவற்றிலும் சிக்கினார். தற்போது அஜித்தின் விவேகம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் அனிருத்துக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து இருக்கின்றனர். லேட்டஸ்ட் தகவல்படி, பிரபல நகைக்கடை அதிபர் ஒருவரின் மகளை அனிருத்துக்கு திருமணம் செய்து வைக்க பேசி முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கின்றன. இந்தாண்டு இறுதியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், தனக்கு வரவிருக்கும் மருமகன் அனிருத்துக்காக அந்த நகைக்கடை அதிபர், ஒரு பெரிய ஸ்டுடியோ ஒன்றையும் அமைத்து கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.