'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி டி.ஏ.மதுரம். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து அம்பிகாபதி, அசோக்குமார், உத்தமபுத்திரன், கண்ணகி, சிவகவி, ஹரிதாஸ், ஆரியமாலா, ஜகதலபிரதாபன், சகுந்தலை, மங்கம்மா சபதம் உள்பட பல படங்களில் கணவன் மனைவியாக நடித்தனர். இருவரும் சேர்ந்து நடித்தால் கணவன் மனைவியாக நடிப்பார்கள். அல்லது காதலன் காதலியாக நடிப்பார்கள். கலைவாணர் அல்லாமல் இன்னொவருக்கு ஜோடியாக டி.ஏ.மதுரம் ஜோடியாக நடித்தார் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான்.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தபோது தனது நாடக குழுவினரின் வாழ்க்கைக்காக தன் மனைவி மதுரத்தை ஒரு படம் தயாரிக்கச் சொன்னார். உடனே மதுரம் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்து வந்த பைத்தியக்காரன் நாடகத்தை அதே பெயரில் சினிமாவாக தயாரித்தார். அதில் எஸ்.வி.சகஸ்ரநாமம் ஹீரோவாக நடித்தார். விதவை தங்கைக்கு திருணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு அண்ணன் பைத்தியக்காரன் ஆவது மாதிரியான கதை.
சோகமான இந்த கதையில் கொஞ்சம் கலகலப்பு இருக்க வேண்டும் என்பதற்காக டி.ஏ.மதுரம் நடித்தார், அவருக்கு ஜோடியாக எம்.ஜி.ஆர் நடித்தார். படம் ஓரளவுக்கு பெற்றி பெற்று என்.எஸ்.கே.வின் நாடக கலைஞர்களை காப்பாற்றியது. பைத்தியக்காரனில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த டி.ஏ.மதுரம் மதுரைவீரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு தாயாக நடித்தார்.