சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் |
தான் நடித்து வந்த சில படங்களிலேயே பேடு பேப்பரை கையில் எடுத்துக்கொண்டு உதவி இயக்குனராக சுற்றிக்கொண்டிருந்தவர் தனுஷ். தங்கமகன் படத்தின் நடித்தபோது அப்படத்தை இயக்கிய வேல்ராஜ் விஷாலின் பாயும் புலி படத்தின் ஒளிப்பதிவுக்காக மதுரைக்கு சென்று விட்ட சமயத்தில் தங்கமகன் படத்தின் படப்பிடிப்பை தானே நடத்தினார் தனுஷ். அதனால் அப்போதேஅவருக்கு தனித்து படம் இயக்கும் தைரியம் வந்து விட்டது.
அதனால், அதையடுத்து தான் ரெடி பண்ணி வைத்திருந்த பவர்பாண்டி கதையை தனது தந்தை கஸ்தூரிராஜா இயக்கிய முதல் படத்தின் நாயகனான ராஜ்கிரணையே நாயகனாக வைத்து இயக்கினார் தனுஷ். அப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெளியான ப.பாண்டி படத்தின் டிரெய்லரை ஒரே நாளில் ஒரு மில்லியன் ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர். கிட்டத்தட்ட முன்னணி ஹீரோ படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ராஜ்கிரண் நடித்துள்ள படத்திற்கு கிடைத்திருப்பதாக உற்சாகத்தில் சொல்கிறார் தனுஷ்.