தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள பவர் பாண்டி ஏப்ரல் மாதம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார் தனுஷ்.
தனுஷுக்கு ஜோடியாக, அமலா பால் நடிக்கும் இந்தப்படத்தில் ஹிந்தி நடிகை கஜோல் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார். வேலையில்லா பட்டதாரி 2 படத்தை வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையின் புறநகரான செம்மஞ்சேரி என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது.
வேலையில்லா பட்டதாரி 2014-ஆம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த செண்ட்டிமென்ட்டை மனதில் வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இந்த ஆண்டு, ஜூலை 18-ம் தேதி வெளியிடலாமா என பரிசீலித்தனர். ஜூலை 18-ம் தேதி செவ்வாய்கிழமையாக இருப்பதால், பட வெளியீட்டுக்கு உகந்த கிழமையாக இல்லை என்பதால் ஜூலை 14-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கின்றனர். எனவே தற்போதைய தகவலின்படி, வேலையில்லா பட்டதாரி 2 ஜூலை 14-ம் தேதி ரிலீஸ்.