Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வித்யா பாலன், சோனாக் ஷி எல்லாம் என் தோழியர்: நட்டி

23 மார், 2017 - 04:55 IST
எழுத்தின் அளவு:
vidya-balan,-sonakshi-are-my-friends:-natti

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என, நடிப்பிலும், ஒளிப்பதிவிலும் பிசியாக இருக்கிறார், நட்டி என்ற நடராஜ். கதாநாயகன் என்பதை விட, யதார்த்தமான கதைகளில், அந்த கதையின் நாயகனாக நடிக்க விரும்புகிறார். இவருடன் ஒரு சந்திப்பு:


எங்கிட்ட மோதாதே படம் பற்றி சொல்லுங்க ?


புதுமுக இயக்குனர், ராமு செல்லப்பா இயக்கிய படம். 1980களில் நடந்த சினிமா, 'கட் அவுட்' பற்றிய கலாசாரத்தை சொல்லும் படம் இது. ரஜினி ரசிகனாக நானும், கமல் ரசிகனாக நண்பன் ராஜாஜியும் நடித்துள்ளோம். இதில், அரசியல், காதல், நட்பு, சென்டிமென்ட் எல்லாமே கலந்து இருக்கும்.


ஹிந்தியில் இப்போது, தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பது பற்றி...


தென் மாநில கலைஞர்கள், பாலிவுட்டில் அதிகமாக வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். பாலிவுட்டை பொறுத்தவரை திறமைக்கு தான், முன்னுரிமை கிடைக்கும். நீங்கள் என்ன மொழி பேசுகிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். முன்பெல்லாம், தென் மாநிலங்களில் இருந்து பாலிவுட்டுக்கு செல்வோர், திரும்பவும் இங்கு வரமாட்டார்கள். இப்போது அப்படி இல்லை; பாலிவுட்டில் ஒரு ஹிட் கொடுத்தால், அடுத்து, இங்கு வந்து, ஒரு ஹிட் கொடுக்கின்றனர்.


வித்யாபாலன், ராணி முகர்ஜி என, பாலிவுட்டில் உங்கள் நட்பு வட்டம், ரொம்ப பெரிதாமே?


படப்பிடிப்பில் ஏற்பட்ட பழக்கம் தான், இதற்கு காரணம். வித்யா பாலன், ராணி முகர்ஜி, சோனாக் ஷி என, பலரும் என் நட்பு வட்டத்தில் உள்ளனர். அவர்கள் வீட்டில் சாப்பிடுவது கூட உண்டு. இதே போல், ஏராளமான ஹீரோக்களும் என் நண்பர்கள் தான். அதைப் பற்றி எல்லாம் கேட்காமல், எல்லாரும் ஹீரோயின்களுடனான நட்பு பற்றியே கேட்கின்றனர்.


படங்களில் நீங்கள் அதிகமாக மேக் அப் போடுவது இல்லையே; ஏன்?


எனக்கு கிடைப்பது எல்லாம், இயல்பான, யதார்த்தமான கதைகள் தான். ஸ்டைலான படங்கள் வராது. அந்தந்த கதைக்கு ஏற்றார் போல் நடிக்கிறேன்.


நிஜ வாழ்வில் நீங்கள் யாருடைய ரசிகன்?


உண்மையாகவே ரஜினி ரசிகன் தான். சென்னையில், பசங்களோட நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்கள் எல்லாம் ரகளையா பார்த்திருக்கேன். தியாகராஜா, ஜெயந்தி, அலங்கார், ஆல்பர்ட் இப்படி பல தியேட்டர்களில் படம் பார்த்திருக்கிறேன்.


நடிப்பு, ஒளிப்பதிவு இதில், எதைத் தொடர விருப்பம்?


இரண்டையுமே தொடர்ந்து பின்பற்ற ஆசை தான். நல்ல கதைகள் கிடைத்தால் நடிப்பேன். ஒளிப்பதிவு என் பிரதான தொழில்; அதை விட்டால், வேறு தொழில் எனக்கு தெரியாது.


நடித்துக் கொண்டிருக்கும் படங்கள்?


நிவின் பாலியுடன் ரிச்சி என்ற படத்தில் நடிக்கிறேன். இதில், படகு மெக்கானிக்காக நடிக்கிறேன். கடல் சார்ந்த கதை இது. இதைத் தொடர்ந்து, கெட்ட பையன் என்ற படத்திலும் நடிக்கிறேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in