டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மாவீரன் கிட்டு படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அவருக்கு ஜோடியாக கத்ரீன் தெரசா நடிக்கிறார். சூரி காமெடியனாக நடித்துள்ள இந்தப்படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு கதாநாயகன் என பெயரிடப்பட்டுள்ளனர்.
பல வருடங்களுக்கு முன் பாண்டியராஜன் நடிப்பில் வெளி வந்த படத்தின் பெயர் இது. எனவே அப்படத்தின் தயாரிப்பாளரான முக்தா சீனிவாசனிடம் அனுமதி பெற்று இந்த தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவு பெற்றுள்ளது. கதாநாயகன் படத்தை விஷ்ணு விஷால் தயாரித்தே வருகிறார். அவரது முந்தைய படமான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை வாங்கி வெளியிட்ட ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜுன் 23 ஆம் தேதி கதாநாயகன் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து முண்டாசுப்பட்டி ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.