ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
காமெடியனாக நடித்து வந்தது வரை ஜாலியாக டயமிங் காமெடிகள் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தவர் சந்தானம். ஆனால் ஹீரோவான பிறகு அவருக்கான பொறுப்பு அதிகரித்து விட்டது. அதனால் நடனம், சண்டை என முறையான பயிற்சி எடுத்து தனது பாடிலாங்குவேஜையும் மாற்றி ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், தான் அதிகமாக காமெடி செய்வதை குறைத்து பர்பாமென்ஸில் கூடுதல் கவனம் செலுத்துகிறார் சந்தானம்.
அந்த வகையில், தற்போது அவர் நடித்து திரைக்கு வர தயார் நிலையில் இருக்கும் சர்வர்சுந்தரம் படத்தில் தந்தையின் கனவை நனவாக்கும் மகனாக நடித்துள்ளாராம். அதாவது, சமையல்காரரான தந்தைக்கு பெரிய ஸ்டார் ஹோட்டலில் சமையல் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசையாம். ஆனால் அது நடைபெறாமல் போக, இஞ்சினியரிங் படித்த மகன் சந்தானத்தை, வெளிநாடு சென்று கேட்டரிங் படித்து வர வைத்து ஸ்டார் ஹோட்டலில் சமையல்காரராக சொல்வாராம். அதனால் தந்தையின் ஆசைக்காக வெளிநாடு சென்று கேட்டரிங் படித்து வந்து பெரிய ஹோட்டலில் சமையல் கலை வல்லுனராக சேர்ந்து சாதனை செய்வாராம் சந்தானம். அந்த வகையில், சர்வர் சுந்தரம் படத்தின் செண்டிமென்ட் காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம் சந்தானம்.