ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
அனேகன் வெற்றிக்கு பிறகு அதே தயாரிப்பு நிறுவனமா ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்டுடன் இணைந்து இருக்கிறார் கே.வி.ஆனந்த். வழக்கம்போல எழுத்தாளர் சுபாவுடன் இணைந்து அவர் உருவாக்கி உள்ள படம் கவண். விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி.ராஜேந்தர், விக்ராந்த், பாண்டியராஜன், நாசர், போஸ் வெங்கட், ஜெகன் நடித்திருக்கிறார்கள். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார், அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது, வருகிற 31ந் தேதி படம் வெளிவருகிறது.
சமீபகாலமாக வரும் திரைப்படங்களில் மீடியாக்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுகிறது. அந்த வரிசையில் கவண் படம் முழுக்க முழுக்க மீடியாக்களை மையப்படுத்தி உருவாகி இருக்கிறதாம்.
கடந்த 20 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கையில் மீடியாக்கள் முக்கிய பங்க வகிக்கின்றன. இதில் நல்லதும் நடந்திருக்கிறது. கெட்டதும் நடந்திருக்கிறது. இவற்றை அப்படியே பதிவு செய்யும் படமாக கவண் உருவாகி இருக்கிறது. விஜய் சேதுபதி தொலைக்காட்சி கேமரா மேனாகவும், மடோனா நிருபராகவும் நடித்திருக்கிறார்கள். டி.ராஜேந்தர் சேனல் ஒன்றின் அதிபராக நடித்திருக்கிறார்.
படம் பிரமாண்ட பட்ஜெட்டில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மீடியாக்களுக்கு எதிரான கடுமையான வசனங்களும், அவற்றின் வியாபார போட்டிகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அடர்ந்த காடுகளில் படாக்கப்பட்டுள்ளது. மீடியாக்கள் எதுவும் படப்பிடிப்புக்கு இடம் கொடுக்காததால் கலை இயக்குனர் கரண் தனியாக ஒரு மீடியா அலுவலகம் மற்றும் ஸ்டூடியோக்களை தத்ருமாக அமைத்து அதில் படமாக்கி உள்ளனர்.