பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
ஹோட்டலையும் சமையலையும் வைத்து இரண்டுமணி நேரம் சினிமாவாக எடுக்கமுடியும் என மலையாளத்தில் அழகாக நிரூபித்துக் காட்டியிருந்தார் இயக்குனர் அன்வர் ரஷீத். அந்தப்படம்தான் துல்கர் சல்மான் நடித்து, கடந்த 2௦12ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'உஸ்தாத் ஹோட்டல்'. இந்தப்படத்தில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசத்தையும் அதையும் தாண்டிய நட்பையும் அதற்கிடையே அழகான ஒரு காதலையும் வைத்து சூப்பர்ஹிட் படமாக இயக்கியிருந்தார் அன்வர் ரஷீத். இந்தப்படத்தின் கதையை எழுதியவர் சாட்சாத் 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் தான்.
தேசியவிருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இந்தப்படத்தை இப்போது கன்னடத்தில் ரீமேக் செய்யும் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் இயக்குனர் பொன் குமரன். பிரியாமணி இரட்டை வேடங்களில் நடித்த 'சாருலதா' என்கிற படத்தை இயக்கினாரே அதே பொன் குமரன் தான்.. மலையாளத்தில் தாத்தா கேரக்டரில் பிரமாதமாக வெளுத்து வாங்கியிருந்தார் மறைந்த நடிகர் திலகன்..
கன்னடத்தில் திலகன் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.. நித்யா மேனன் நடித்த கேரக்டரில் வேதிகா நடிக்கிறார்.. மலையாளத்தில் நித்யா மேனன் இடம்பெறும் காட்சிகள் குறைவாகவே இருக்கும். ஆனால் கன்னடத்திற்காக சில மாற்றங்களை செய்து வேதிகாவின் கேரக்டர் படம் முழுவதும் வருவது போல மாற்றியுள்ளார்களாம்.