தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! |
நானிக்கு ஜோடியாக நேனு லோக்கல் எனும் தெலுங்கு படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக தமிழில் பைரவா படத்தில் நடித்தார். இருபடங்களும் அடுத்தடுத்து வெளிவந்தன. மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாண் இணைந்து நடிப்பதாகக் கூறப்படும், மெகா பட்ஜெட் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. டோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டும் நடிக்க திட்டமிட்டிருந்த கீர்த்தி சுரேஷ் பட ரிலீஸிற்கு அதிக இடைவெளி விடக்கூடாது என்பதற்காக வளர்ந்து வரும் நடிகர்கள் படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் பெல்லம்கொண்ட ஸ்ரீநிவாஸ் நாயாகனாக நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் ஸ்ரீவாஸ் இயக்கவிருக்கும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகின்றது. இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் நடித்து வரும் ஸ்ரீநிவாஸ் அப்படத்தை முடித்த பின்னர் இயக்குனர் ஸ்ரீவாஸ் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.